பரபரப்பு!!! தலைமை செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்...! சோதனை தீவிரம்..!
Excitement Bomb threat Secretariat Investigation intensified
சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்தவுடன் காவலர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
அடுத்ததாக முழுப் பகுதியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட காவலர்கள், விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்தத் தகவல் வெளியாகி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியது.
English Summary
Excitement Bomb threat Secretariat Investigation intensified