தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு உள்ளது.. காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் பதில் என்ன.? இபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


மதுரையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையத்தில் இருந்து கிளம்பி காளவாசல் சென்றது. அப்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால், வந்த காரின் ஓட்டுநர் முந்தி செல்ல வழி விடும்படி தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டிருந்தார்.  போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநனரால் வழி விட முடியவில்லை. 

அரசு பேருந்து  ஓட்டுநர் வழி விடாததால், ஆத்திரமடைந்த கார் ஓட்டுனர் அரசு பேருந்தை முந்திச் சென்று பேருந்தை நிறுத்தினார். இதையடுத்து, காரில் இருந்து இறங்கிய கார் ஓட்டுனர், பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார். மேலும் ஓட்டுநரை ஆபாசமாக திட்டியதோடு, பேருந்து ஓட்டுநரை கல்லாலும், கம்பியால் தாக்கி உள்ளார். இதில் ஓட்டுநரின் கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இந்நிலையில், இந்த சம்பவங்கள் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கேடு இருப்பதை காட்டுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து, மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டப்பட்டிருப்பது  வேதனையளிக்கிறது.

குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டிருப்பதை காட்டுகிறது.இதற்கு காவல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன? என கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

eps tweet for mudurai govt bus issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->