தி.மு.க கார்ப்பரேட் கம்பெனி... ஸ்டாலின் அதை குத்தகைக்கு எடுத்துள்ளார் - இபிஎஸ் தாக்கு.! - Seithipunal
Seithipunal


மதுரை, மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மற்றும் பழ மார்க்கெட் பகுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மதுரை நாடாளுமன்ற கழக வேட்பாளரை ஆதரித்து வாக்குகளை செய்கிறார். 

அவருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, இந்த பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் பழ மார்க்கெட்டுக்கு நேரில் வந்து வியாபாரிகளையும் பொதுமக்களையும் சந்தித்து விளைச்சல் தொடர்பாகவும் விலை தொடர்பாகவும் கேட்டறிந்தேன். 

இன்றைக்கு வறட்சியாக இருப்பதால் விளைச்சல் சில இடங்களில் குறைவாக உள்ளது. எனவே விலை அதிகரித்துள்ளது என தெரிவித்தனர். பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. 

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அகவிலைப்படி பிடித்தம் செய்து தான் அரசு ஊழியர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. 

தேர்தல் அறிவிப்பின்போது திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் கொடுக்கப்படும் என தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இது குறித்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை. 

சர்க்கரை என தெரிவித்தால் இனிக்காது வாயில் போட்டதால் போட்டால் தான் இனிக்கும். மூன்று வருடங்களாக நிறைவேற்றாதவை தேர்தல் வரும் போது பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி வாக்கு பெறுவது திமுகவின் வாடிக்கையாக உள்ளது. 

திமுக கட்சியை மு.க. ஸ்டாலின் குத்தகை எடுத்துள்ளார். இன்றைக்கு தி.மு.க கார்ப்பரேட் கம்பெனி போல தான். அவர்களது குடும்ப அரசியல் போல அதிமுகவில் இல்லை. 

வரலாற்றைப் பாருங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, கழக நிர்வாகிகள், தொண்டர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS says DMK Corporate Company 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->