#சென்னை || இன்னும் எத்தனை உயிர் போகும்வரை காத்திருக்க போகிறீர்கள்? ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா? - கொந்தளிப்பில் எடப்பாடி பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். தற்போது, அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள மத்திய தொலைத்தொடர்பு பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று சரவணகுமார் பணியில் இருக்கும்போதேதன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் சொல்லப்படுகிறது. மேலும் வெளியான தகவலின்படி ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"இன்று (7.5.2022) ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் திரு.சரவணக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி நெஞ்சை உலுக்குகிறது. 

உயிரைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த வழக்கில் கோட்டை விட்ட இந்த விடியா அரசு, உரிய தடை சட்டத்தை கொண்டு வராதது ஏன்? இன்னும் எத்தனை உயிர் போகும்வரை காத்திருக்க போகிறீர்கள்? ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா?" என்று தமிழக அரசுக்கு இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

eps say about chennai cop saravana kumar suicide issue


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->