கவனமா பேசுங்க.. அதிமுக ஒரு மாதிரியான கட்சி.. அண்ணாமலையை எச்சரிக்கும் ஈ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக வேட்பாளர் ஆதரித்து நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி "இன்னொருத்தர் புதுசா வந்துட்டாரு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை. இவரு 2024 அதிமுகவ ஒழிக்கப் போராரம். 

தம்பி.. அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. உன் பாட்டனையே பார்த்த கட்சி. உன்ன போல எத்தனையோ பேரு கொக்கரிச்சாங்க. ஆணவத்தி முறையில் இப்படி பேசாதப்பா.. அதிமுக என்ற கட்சி இல்லை என்றால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருக்காது, ஏற்றம் பெற்றிருக்காது. 

அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததால் தான் இந்த மண்ணில் இருக்கும் மக்கள் பல நல்ல திட்டங்களை பெற்றனர். எங்க கட்சியாவா அழிக்க பாக்குற.. 1998ல் ஊர் ஊரா தாமரை என்ற சின்னம் இருக்கிறது என அடையாளம் காட்டியதே அதிமுக தான்.. தாமரைச் சின்னம் என்றால் எந்த கட்சியினு தெரியாத இருந்த காலம்.. அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து கிராமம் தோறும் தாமரை சின்னத்தை கொண்டு சென்றது அதிமுக தான்.. 

அப்படி சொன்ன கட்சியை இப்போது ஒழிக்க பார்க்கிறார்.. நீங்க எல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் ஆனவங்க.. மத்தியில் இருப்பவர்கள் உங்களை அப்பாயிண்ட்மெண்ட் பண்ணா தான் கட்சித் தலைவராய் இருப்பீங்க.. எப்ப வேண்டுமானாலும் அவர்கள் தலைவரை மாற்றலாம்.. ஆனால் அதிமுகவில் உழைக்கின்றவர்கள் தான் தலைவராக வர முடியும்.. 

நான் கிளைச் செயலாளர் இருந்து ஒன்றியம், மாவட்டம், எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் பொறுப்புகள் வகித்த பிறகு தன் முதலமைச்சரானேன். இங்கே உழைத்தால் ஏற்றம் பெறுவார்கள். ஆனால் அங்கே டெல்லி நினைத்தால் தலைவராகலாம். நீங்க எப்படி ஐபிஎஸ் படிச்சு போனீங்களோ அந்த மாதிரி உங்களை டெல்லி அப்பாயிண்ட்மெண்ட் பண்ணி இருக்கு. 

கொஞ்சம் கவனமா பேசுங்க.. அதிமுக ஒரு மாதிரியான கட்சி.. புரிஞ்சுக்கோங்க.. கருணாநிதியும் பாத்தாச்சு.. ஸ்டாலினையும் பாத்தாச்சு.. எத்தனையோ தலைவர்களை பார்த்து யாருக்கும் அஞ்சாமல் யாருக்கும் அடிமையில்லாமல் துணிச்சலோடு சவால் விட்டிருக்கும் கட்சி அதிமுக தான்.. 

அவர் இன்று ஐநூறு திட்டங்களை 500 நாட்களில் 100 திட்டங்களை நிறைவேற்றுவதாக பேசுகிறார். பொய்ய பொறுத்து பேசினா மெய்யே திருத்தணும் முழிக்குமாம்.. ஏற்கனவே 2021ல 520 அறிக்கைகளை வெளியிட்டு அவர் ஏமாற்றுவது போதாதுனு.. இப்ப இவர் வந்து புளுகு மூட்டையை அவுத்து விடுகிறார்.. ஏன் இத்தனை நாளா அந்த 100 திட்டத்தை நிறைவேற்றவில்லை? இதுவரைக்கும் உனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா? 

ஒரு கவுன்சிலராக கூட முடியல.. ஒரு எம்எல்ஏ ஆக முடியல, எம்பி ஆக முடியல.. நீ வந்து அதிமுகவை ஒழிக்க போறியா? புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒரு படத்தில் பதவி வரும்போது பணிவு வரவேண்டும் எனக் கூறியிருப்பார். அது உங்களிடம் இல்லை. எனவே தலைக்கு ஏறிய கர்ப்பத்தில் ஆடாதீங்க அதெல்லாம் நிலைக்காது என்றைக்குமே மற்றவர்கள் மரியாதை கொடுத்து அது திரும்ப பெற்றால் தான் மனிதனாய் பிறந்தவருக்கு மரியாதை உண்டு அது அவரிடம் கிடையாது" அண்ணாமலையை கடுமையாக தாக்கி எச்சரிக்கை விடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS criticized and waring to Annamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->