தேர்தல் கமிஷனின் ஸ்பெஷல் மனு… களத்தில் புதிய ஸ்டைல்...! - விஜய்க்கு என்ன சின்னம் தெரியுமா...?
Election Commissions special petition New style field Do you know what symbol Vijay
தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 2026 ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருப்பதால், அரசியல் வெப்பம் ஏற்கனவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறை மாநிலத்தில் நான்கு முனைப்போட்டி உருவாகும் என்பதற்கானச்சாத்தியங்கள் வலுத்துள்ளன.
திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் பழைய சக்திகளாக களமிறங்க, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டசபை அரங்கில் அதிரடி காட்டத் தயாராகி வருகிறது.

அதே நேரத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.முதல் தேர்தலிலேயே வலுவான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் த.வெ.க. தனது அமைப்பை கடுமையாக பலப்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி கட்சி தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டிய சின்னத்திற்கான நடவடிக்கைகளும் வேகமடைந்துள்ளன.
தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்காக 184 பொதுச் சின்னங்களை பட்டியலிட்டுள்ளது. விதிகளின்படி, புதிய கட்சிகள் தமக்கு விருப்பமான 5 முதல் 10 சின்னங்களை குறிப்பிடிக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். த.வெ.க.வும் இதனடிப்படையில் பல சின்னங்களைத் தெரிவுச் செய்து விண்ணப்பித்தது.
முதலில், “ஆட்டோ” சின்னத்தைப் பெற த.வெ.க. முயற்சி செய்தது. ஆனால் அது ஏற்கனவே கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அந்த விருப்பம் கைகூடவில்லை. பின்னர் “விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம்” போன்ற சின்னங்களையும் பட்டியலிட்டிருந்தனர்.
இந்த நிலையில், எதிர்பார்ப்புகளை மாற்றி, தேர்தல் ஆணையம் த.வெ.க.வுக்கு “மோதிரம்” (Ring) சின்னத்தை ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விஜய் மக்கள்முன் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
புதிய சின்னத்துடன் தேர்தல் களம் இறங்கும் த.வெ.க. அடுத்த ஆண்டு நடைபெறும் அரசியல் போராட்டத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது தற்போது அனைவரின் கவனத்தையும் கவர்கிறது.
English Summary
Election Commissions special petition New style field Do you know what symbol Vijay