நாம் தமிழர் கட்சிக்கு வந்த அதிர்ச்சி தகவல் - எந்த சின்னத்தில் போட்டி?
election commission order mic symbol to ntk party
இந்தியாவில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனதால், மாற்றுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தது. இதையடுத்து, அக்கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், அந்த சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி “மைக்” சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.
English Summary
election commission order mic symbol to ntk party