தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

அசாமில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்தின் உதவி செயலர் பவன் திவான் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

 இதையடுத்து, தேர்தல் பணியில் தொடர்புடைய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யவோ, பதவி உயர்த்தவும் தடை விதிக்கப்படுகிறது. அசாமில் நேற்று 12 ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த பணியிடமாற்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்கும்படி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission new order


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->