இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை: மேற்கு வங்காளம் வாக்காளர் திருத்தப் பணியில் முறைகேடு -7 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காள மாநிலத்தில் மேற்கு வங்காளம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த ‘எஸ்.ஐ.ஆர்.’ (Special Intensive Revision) பணிகளின் போது பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிர்வாக குளறுபடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட 7 தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யும் கடும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் அதிகார துஷ்பிரயோகம், கடமையின்மை மற்றும் விதிமுறைகளை மீறிய செயல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் மாநில அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election Commission India takes strict action West Bengal voter verification irregularities 7 election officials suspended


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->