'எடப்பாடி பழனிசாமி அவராக பேசவில்லை.. அவருக்கு யாரோ சொல்லித்தருகிறார்கள்': திருமாவளவன்..!
Edappadi Palaniswami is not speaking as himself someone is telling him that Thirumavalavan
''அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித் தருகிறார்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவை பாஜ விழுங்கி செரித்துவிடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி திரும்ப திரும்ப பொறுப்புடன், கவலையுடன் சுட்டிக்காட்டியது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சுட்டிக்காட்டியது என்றும், ஆனால், அப்படியே திருப்பி விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் என இபிஎஸ் கூறியுள்ளார் என்று திருமா சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படி எல்லாம் அவர் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித்தருகிறார்கள் என்று தான் கருதுகிறேன் என்றும், அவராகவே இந்த கருத்தை சொல்வதாக என்னால் ஏற்க முடியவில்லை என்றும், அதிமுகவுக்கு எதிராக நான் பேசுவதாக அவர் நினைக்கிறார் என்று தான் கருதுகிறேன் என்று நிருபர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக சொல்கிறேன் என்பதை நன்கு கட்டாயம் உணர்வார்கள் என்றும், இதனை எடப்பாடி பழனிசாமியும் உணர்வார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சேராத இடந்தனில் சேர்ந்திருக்கிற சூழலில், அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று கருதுகிறேன் அப்படி பேசினால், நான் கவலைப்படுவதற்கு ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2001-இல் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓரிரு பொதுத்தேர்தலை விட அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் பயணிக்கிறது என்றும், மேலும், மெல்ல மெல்ல வளர்ந்து மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், கட்சி வளர்ச்சி அடைந்துள்ளதே தவிர வீழ்ச்சி அடையவில்லை எனவும், எனவே இபிஎஸ் திரித்துப் பேசுவதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜவின் கொள்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எதிர்க்கும் என்றும் திருமாவளவன் மேலும் கூறியுள்ளார்,
English Summary
Edappadi Palaniswami is not speaking as himself someone is telling him that Thirumavalavan