மேகதாது அணை விவகாரம்: 'முதல்வர் விஜய் கர்நாடகா செல்வதை தவிர்க்க வேண்டும்'; எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


''தமிழக முதலமைச்சர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதை தமிழக முதலமைச்சர் தவிர்க்க வேண்டும்.'' என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் மேலும் கூறியதாவது; மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுவது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டதோடு, வேளாண் பட்ஜெட்டில் கடன் தள்ளுபடியை அறிவிக்காவிட்டால் அதிமுக சார்பில் மாநிலந் தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களாக வந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வாதாடி, போராடி தான் தண்ணீரை பெற வேண்டிய நிலை இருந்து வருகிறது என்றும், தற்போது கர்நாடகத்தில் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளவர் மேகதாதுவில் அணை கட்டிய தீர வேண்டும் என்று தெரிவித்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு மேகதாது தொடர்பாக தனி தீர்மானம் வைக்கப்பட்டது. அப்போது முன்மொழிபட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வைத்த கருத்தின் அடிப்படையில், ஜோசப் விஜய் அதை விவாதத்திற்கு வைக்காமலேயே வழிமொழிந்து விட்டார். இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தமிழக முதலமைச்சர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக செய்திகள் வருகின்றன.  இதை தமிழக முதலமைச்சர் தவிர்க்க வேண்டும். என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாள்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami insists that CM Vijay should avoid going to Karnataka


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->