டிபன் பாக்ஸில் பணம்... எண்ணெய், அரிசி, புளி, காய்கறி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலை உயர்வு... எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தல் முடிவுகள், தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் தாறுமாறாக உயர்ந்துள்ள விலைவாசி குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தாராபுரம் தொகுதியில் கடந்த தேர்தலைக் காட்டிலும் தவெக குறைந்த வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதுடன், முதலமைச்சர் விஜயே நேரில் வந்து பிரச்சாரம் செய்தும் பெரிய அளவில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றார்.

இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிகார பலம் மற்றும் பண பலம் மூலமாகவே தவெக வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தவெக அரசுக்கு ஆதரவளித்த இடதுசாரிகளே தங்களை எதிர்த்துப் போட்டியிட்டதைச் சுட்டிக்காட்டினார்.

இடைத்தேர்தல் தொகுதிகளில் டிபன் பாக்ஸில் பணம் கொடுக்கப்பட்டதாகக் கம்யூனிஸ்ட் கட்சியினரே குற்றம்சாட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

எண்ணெய், அரிசி, புளி, காய்கறி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக உணவுத்துறை அமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் விமர்சித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi K Palaniswami Slams TVK Government


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->