11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குழப்பமும் உண்மையும்: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!
Confusion Cleared Clarification on Class 11 Public Exam Schedule in Tamil Nadu
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு கால அட்டவணையைச் சென்னை அரசு தேர்வுகள் இயக்கக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். இதன் படி, மார்ச் 3-ஆம் தேதி 12-ஆம் வகுப்புத் தேர்வும், மார்ச் 5-ஆம் தேதி 11-ஆம் வகுப்புத் தேர்வும், மார்ச் 17-ஆம் தேதி 10-ஆம் வகுப்புத் தேர்வும் தொடங்குகின்றன. 11-ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 3 முதல் 29 வரை நடைபெற்று, மே 7-ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையில் 11-ஆம் வகுப்புத் தேர்வும் இடம்பெற்றிருப்பதால், நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறதா என்ற மிகப்பெரிய சந்தேகம் மாணவர்களிடையேயும் பெற்றோரிடையேயும் எழுந்துள்ளது.
உண்மை நிலவரமும் கல்வித்துறை விளக்கமும்
நடப்பு கல்வியாண்டில் (Regular Students) 11-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு கிடையாது என்று கல்வித்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள இந்த 11-ஆம் வகுப்புத் தேர்வு அட்டளணையானது, தற்போதைய மாணவர்களுக்கானது அல்ல. மாறாக, இதற்கு முன்பு அதாவது கடந்த 2018 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான கல்வி ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் பல்வேறு காரணங்களால் தோல்வியடைந்த பழைய மாணவர்களுக்கான (Arrears / Arrear Candidates) சிறப்புத் பொதுத் தேர்வு அட்டவணையே இதுவாகும்.
எனவே, நடப்பாண்டில் வழக்கமான வகுப்புகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் இதுகுறித்து எந்தவிதமான குழப்பமும் அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Confusion Cleared Clarification on Class 11 Public Exam Schedule in Tamil Nadu