வசமாக சிக்கிய திமுக கவுன்சிலர்! தொழிலதிபர் ரத்தினம் எங்கே? குடும்பத்தை ரவுண்டு கட்டும் ED! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி உரிமையாளர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஜி.என்.டி சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோர் வீடுகளில் நேற்று முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவிந்தன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையானது நிறைவடைந்துள்ள நிலையில் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜி.என்.டி சாலையில் உள்ள அவரது வீட்டில் ரத்தினத்தின் மூத்த மகன் துரைராஜ், இளைய மகன் வெங்கடேஷ் மற்றும் அவருடைய தாயார், மனைவி மட்டுமே உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று காலை நடை பயிற்சிக்காக சென்ற தொழிலதிபர் ரத்தினம் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தெரிந்தவுடன் வீடு திரும்பவில்லை.

இதனால் அவர் அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தலைமறைவாகி இருக்கக் கூடும் என பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில் தொழிலதிபர் ரத்தினம் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அவருடைய இளைய மகனும் திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டு திமுக கவுன்சிலருமான வெங்கடேஷிடம் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் எந்த மாதிரியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல் வெளியாகவில்லை.

தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகளையும் மதிப்பீடு செய்ய வங்கி அதிகாரி மற்றும் நகை மதிப்பீடியாளர்கள் நகையடையுடன் ரத்தினம் வீட்டிற்குள் சென்றுள்ள நிலையில் நகை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவரது வீட்டில் உள்ள பீரோ மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து கமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED interrogates with Rathinam son DMK councilor Venkatesh


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->