அடுத்த இடி... "அதிமுகவுக்கே இரட்டை இலை".. ஓ.பி.எஸ் மனு தள்ளுபடி.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் அணிக்கு இராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு நிலையில் அத்தகுதியில் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக போட்டியிடுகிறார். 

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில் தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் எனவும், வேறு சின்னம் ஒதுக்கினால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்திருந்தார்.

வீட்டுமனை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அந்த மனு மீது பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம் ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்து அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தனக்கு பக்கெட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்திருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ECI refused ops petition regards two leaf symbol freeze


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->