திடீர் ட்விஸ்ட்... பானை சின்னத்தில் விசிக போட்டி.. துள்ளி குதிக்கும் திருமாவளவன்.!! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு கேரளா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் போட்டியிட உள்ளதால் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. 

அந்த விண்ணப்பத்தின் மீது இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்காததால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

 

அந்த வடக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் ஒரு சதவீதத்திற்கு குறைவாக வாக்குகள் பெற்றுள்ளதால் அவர்கள் கூறும் பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் கை விரித்தது. 

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் எதிர் வரும் மக்களவை பொதுத் தேர்தலில் 5 மாநிலங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI allocated pot symbol to Vck


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->