அனைத்து கட்சி கூட்டத்திற்கு த.வெ.க. & நா.த.க.விற்கு அழைப்பு! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதை அரசியல் நோக்கத்துடன் மத்திய அரசு தலையீடு செய்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனையில், மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த ஒருமித்த முடிவை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, வரும் நவம்பர் 2ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்புகள் பல்வேறு கட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் அடங்கும்.

மேலும், பாஜக–அதிமுக கூட்டணியில் உள்ள ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கும் (த.கா) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி இரண்டும் SIR திட்டத்தை அரசியல் நோக்கத்துடன் உள்ளதாகக் கூறி கடுமையாக எதிர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EC SIR issue TNgovt CM Mk STalin DMK TVK NTK


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->