திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை வடக்கு மாவட்ட திமுக நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், சென்னை வடக்கு - சென்னை வடகிழக்கு என 2 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. அதன்படி, 

சென்னை வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாதவரம் எஸ். சுதர்சனம்.
சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தா.இளைய அருணா.

சென்னை மேற்கு மாவட்டம் சென்னை மேற்கு - சென்னை தென்மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. அதன்படி, 

சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மயிலை. த.வேலு.
சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு

தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக, தஞ்சை வடக்கு மாவட்டம், தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை தெற்கு மாவட்டம் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. அதன்படி, 

தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் க.கல்யாணசுந்தரம்
தஞ்சை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன்
தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் ஏனாதி.ப.பாலசுப்ரமணியம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan announce for dmk party members


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal