எதிர் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதை விளக்கவேண்டும்; துரை வைகோ தாக்கு..! - Seithipunal
Seithipunal


 மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி.யுமான துரை வைகோ, புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது ''தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாக பேசும் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதை கூற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சாதி, மதம், பணம் கடந்து தவெக ஆட்சி அமைந்துள்ளதை தான் வரவேற்பதாகவும், இதன்மூலம் எளியவர்கள் உட்பட எவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 
மேலும், மாற்றம் வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளதால் சரியான அலுவலர்களை நியமித்து மாற்றத்துக்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தேநேரம், புதிய அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், குறிப்பாக, காங்கிரஸிடம் இருந்து தமிழகத்தில் ஆட்சியை திமுக கைப்பற்றிய போது ஏற்பட்ட நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும்,  தவெகவை திராவிட இயக்கமாகவே தான் பார்க்கிறேன். தவெக அரசுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு அளித்ததும், கூட்டணி அரசு அமைந்திருப்பதும் வரவேற்கத்தக்கது என்றும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அத்துடன், மதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றும், தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாக பேசும் கட்சியினர், கடந்த காலங்களில் நடந்தது குதிரை பேரமா, கழுதை பேரமா என்பதை கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Durai Vaiko has stated that party members must explain whether what transpired in the past was a horse trading deal or a donkey trading deal


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->