புத்த பூர்ணிமா பயணத்தில் அதிரடி திருப்பம்...! - அமித்ஷாவுடன் 'நேருக்கு நேர்' பேச லடாக் தலைவர்கள் முடிவு...! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா, இரு நாள் பயணமாக ஏப்ரல் 30-ஆம் தேதி லடாக் பகுதிக்கு செல்ல உள்ளார். இந்த பயணம் ஆன்மிக மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1-ஆம் தேதி கொண்டாடப்படும் புத்த பூர்ணிமா தினத்தையொட்டி, புத்த பகவானின் புனிதச் சின்னங்களுக்கு அமித்ஷா மரியாதை செலுத்துவார் என லடாக் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், லடாக் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து தீர்வு காணும் நோக்கில், மே 22-ஆம் தேதி துணைக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இதுகுறித்து ஆலோசனைகள் நடந்திருந்தன.இந்நிலையில், லே உச்ச அமைப்பு இந்த கூட்டம் மட்டுமே போதுமானதல்ல என வலியுறுத்தி, லடாக் வருகை தரும் அமித்ஷா தங்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குதல், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து, லடாக் தலைவர்கள் மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி இணைந்து 2021 முதல் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dramatic turn Buddha Purnima trip Ladakh leaders decide talk face to face Amit Shah


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->