வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் நல்லதே நடக்கும் - நம்பிக்கையூட்டும் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களுக்கு  வீரவணக்கம்: இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்று, பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போரில்  துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த  21 ஈகியர்களுக்கும் அவர்களின் 35-ஆவது நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்துகிறேன்.   அவர்களின் தியாகத்திற்கு இந்த உலகில்  ஈடு இணையில்லை; அவர்களின் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்.

வன்னியர் 10.50% உள் இட ஒதுக்கீட்டை  மீட்டெடுப்பதில் இதுவரை என்ன நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; இப்போது என்ன நடக்கிறதோ, அதுவும்  நன்றாகவே நடக்கிறது; இனி நடக்கப் போவதும் நன்றாகவே நடக்கும். நமக்கான சமூகநீதியை நாம் நிச்சயமாக வென்றெடுப்போம்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பாட்டாளி மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான போராட்டத்தில் தங்களின் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளுக்கும் இன்று  35-ஆவது நினைவு நாள். அவர்கள் செய்த ஈடு இணையற்ற தியாகத்திற்காக அவர்களை இந்த நாளில் மட்டுமின்றி எந்நாளும்  வணங்குகிறேன்... போற்றுகிறேன்.

பாட்டாளி மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேற  வேண்டும் என்பது தான் இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் இன்னுயிர்  ஈந்ததன் நோக்கம்.  அந்த நோக்கத்தை நிறைவேற்ற மருத்துவர்  அய்யா அவர்களின் வழியில்  நாம் அனைவரும் உழைப்போம்.... வெற்றி பெறுவோம்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Vanniyar Reservation 17092022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->