ஊழலுக்கு எதிராக போராடும் ஆசிரியர் சங்கத் தலைவரை பழிவாங்க முயலுவதா? - தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் அவசர கோரிக்கை! - Seithipunal
Seithipunal


பெரியார் பல்கலைக்கழக ஊழலுக்கு எதிராக போராடும் ஆசிரியர் சங்கத் தலைவரை பழிவாங்க முயலும் பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை நீக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதன் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது? என்று விளக்கமளிக்கக் கோரி அவருக்கு பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் தங்கவேலு குறிப்பாணை அனுப்பியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழக பேராசிரியர் என்ற முறையில்  வைத்தியநாதன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை; பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்  என்ற முறையில் கலந்து கொண்டுள்ளார்.  தொழிற்சங்க விதிகள் மற்றும் உரிமைகளின்படி  இதில் எந்த தவறும் இல்லை. இதை அறிந்திருந்தும் அவருக்கு குறிப்பாணை அனுப்புவது அப்பட்டமான பழிவாங்கும் செயல்!

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசே விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது.அந்த விசாரணைக் குழு முன் அரசுத் தரப்புசாட்சியாக பேராசிரியர் வைத்தியநாதன்  சாட்சியளிக்க உள்ளார். அதைத் தடுக்கும் நோக்குடன் அச்சுறுத்துவதற்காகவே அவருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

தமிழக அரசால் பட்டியலிடப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் மற்றும் முறைகேடுகளில் பேராசிரியர் தங்கவேலு சம்பந்தப்பட்டுள்ளார். அப்படிப்பட்டவரை பொறுப்பு பதிவாளராக  நியமித்தது தவறு.  அவரது பழி வாங்கலை அனுமதிப்பது அதைவிட பெரும் தவறு. 

எனவே பேராசிரியர் வைத்தியநாதனுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணையை திரும்பப் பெறவும் பழிவாங்கும் நோக்கில் செயல்படும் பேராசிரியர் தங்கவேலுவை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Periyar University Staff issue 23042023


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->