ஸ்ரீராம் நிதி நிறுவனத்தால் திமுக விவசாயி பலி.! முதல் ஆளாக களத்தில் இறங்கிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தனியார் நிதிநிறுவனத்தின் ஜப்தி நடவடிக்கையால் உழவர் நீலமேகம் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் திமுக பிரமுகர் என்று சொல்லப்படுகிறது. 

இந்நிலையில்,  உழவர் நீலமேகம் மறைவுக்கு பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "டிராக்டர் கடனுக்கு பிணை அளித்ததற்காக 6 ஏக்கர் நிலத்தை ஸ்ரீராம் நிதி நிறுவனம் ஜப்தி செய்ய முயன்றதால் அதிர்ச்சியடைந்த செய்யூர் தொகுதி புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் என்ற விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடன் பெற்றவர் வறுமை காரணமாக தவணை செலுத்த முடியாத நிலையில், போதிய அவகாசம் தராமல் பிணை அளித்தவரின் வாழ்வாதாரத்தை நிதி நிறுவனம் பிடுங்க நினைத்தது தான் நீலமேகத்தின்  உயிரிழப்புக்கு காரணம்; இதற்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

நீலமேகத்தின் இறப்புக்கு நீதி கேட்டு உழவர்கள் அச்சரப்பாக்கத்தில் போராட்டம் நடத்துகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஜப்தி நடவடிக்கையையும் நிறுத்திவைக்க வேண்டும். இறந்த நீலமேகம் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்." என்று முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Mourning to Farmer Neelamegam Dead


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->