பாசிச மாடல் பாஜக... அடிமை மாடல் அதிமுக – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
DMK Udhay BJP ADMk Alliance
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெறப்போகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“திமுகவின் வெற்றி, பூத் முகவர்கள் ஒழுங்காக செயல்படுவதில்தான் உள்ளது. அடுத்த 8 மாதங்கள், கட்சியின் பூத் முகவர்களுக்கு மிக முக்கியமான காலமாக இருக்கிறது. பல கட்சிகள் பூத் முகவர்கள் இல்லாமலே செயல்படுகின்றன, ஆனால் திமுக டிஜிட்டல் பூத் முகவர்களை உருவாக்கியுள்ள ஒரே கட்சியாகும்,” என்றார்.
மேலும், பாஜகவை "பாசிச மாடல் அரசு" என்றும், அதிமுகவை "அடிமை மாடல் அரசு" என்றும் கடுமையாக விமர்சித்த அவர், “இந்த கூட்டணிகளின் உண்மை முகங்கள் மக்களால் விரைவில் புரிந்துகொள்ளப்படும்” என்றார்.
மகளிர் நலத்திட்டங்கள் குறித்து அவர் கூறும்போது, “730 கோடி பெண்கள் பயணங்கள் ‘மகளிர் விடியல்’ திட்டத்தின் மூலம் நடந்துள்ளன. பெண்கள் கல்வி பயிலத் தலா மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியுள்ளது” என்றார்.
“மேலும், 20 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் மூலம் நாள்தோறும் நேரடியாகப் பயனடைகின்றனர்” என்று கூறிய அவர், திமுக அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்கள் தான் எதிர்வரும் தேர்தலுக்கு தளமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
English Summary
DMK Udhay BJP ADMk Alliance