திமுகவா? தவெகவா? — கூட்டணிக் குழப்பத்தில் கொதிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்…பெரிய பிளவுக்கான அபாய எச்சரிக்கை!டெல்லிக்கு வார்னிங்!
DMK Tvk Tamil Nadu Congress boiling in alliance chaos Dangerous warning of a major split Warning to Delhi
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையடுத்து, தமிழ்நாடு அரசியலில் அலைகள் பெருகி வரும் நிலையில், அதிக பரபரப்பு நிலவுகிறது காங்கிரஸ் கட்சிக்குள். திமுகவுடன் தொடர்ந்த கூட்டணியா? இல்லையெனில் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் புதிய கூட்டணியா? என்ற கேள்வியிலேயே கட்சி இரண்டாகப் பிளவுபடும் சூழல் உருவாகியுள்ளது.
ஒருபுறம், தமிழக காங்கிரஸ் தலைமை — குறிப்பாக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் — திமுக கூட்டணியே கட்சிக்கு உயிர்க்கொடி என்று வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம், காங்கிரஸின் டெல்லி மேலிடம், விஜயின் தவெகவுடன் புதிய கூட்டணியை ஆராயும் மனநிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கட்சிக்குள் பதற்றம் உச்சத்துக்கு சென்றுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி, முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகள் உள்ளிட்ட பல வசதிகளை TVK தயங்காமல் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், திமுக கடந்த லோக்சபா தேர்தலின் நடைமுறையை முன்னிட்டு காங்கிரஸுக்கு குறைந்த இடங்களை மட்டுமே வழங்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் காங்கிரஸின் டெல்லி–தமிழகம் இடையே கருத்து வேறுபாடுகள் வெடித்திருக்கின்றன.
இந்த குழப்பத்தைத் தீர்க்க 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை காங்கிரஸ் அமைத்து, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால் அதற்குள் காங்கிரஸின் தரவு நிபுணர் பிரவீன் சக்கரவர்த்தி விஜயைச் சந்தித்தது, கட்சிக்குள் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பதால், இந்த சந்திப்பு “டெல்லி ஸிக்னல்” என திமுக வட்டாரங்கள் சந்தேகப்படுகின்றன.
இதற்கு மேலாக, பிரவீன்–திமுக இடையே முன்பிருந்த பிணக்குகள், மயிலாடுதுறையில் போட்டியிட அவர் விரும்பிய ஆசையை திமுக தடுத்தது போன்ற காரணங்களால், இந்த விஜய்–சக்கரவர்த்தி சந்திப்பு அதிக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
மிகவும் முக்கியமான ஒன்று — பெரும்பாலான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக கூட்டணியை விட்டு செல்லத் தயங்குகின்றனர். தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது கட்சிக்குள் மிகச் சிலரின் எண்ணமே.ஆனால், இறுதி முடிவு டெல்லி தலைமையிடம் உள்ளது.
ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்தை புறக்கணித்து TVK–வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தால்,
1996ல் நடந்ததைப் போல காங்கிரஸ் கட்சியில் பெரிய பிளவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
இப்போதைய சூழ்நிலை, சத்தியமூர்த்தி பவனுக்கே பூட்டு போடும் நிலை!காங்கிரஸ் மாநிலத்தில் இரண்டு பிரிவுகளாகும் வாய்ப்பு!கூட்டணி முடிவை அறிவிக்கும் முன் உள்கட்சி வெடிப்புகள்!என்ற பல கவலைகளை உருவாக்கியுள்ளது.
திமுக கூட்டணியிலா தொடரப் போகிறது காங்கிரஸ்… அல்லது விஜயின் தவெக பக்கம் போகப் போகிறதா?
டெல்லி தலைமை எந்தப் பாதையைத் தேர்வு செய்கிறது என்பது தற்போது கோடானுகோடி கண்கள் காத்திருக்கும் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
English Summary
DMK Tvk Tamil Nadu Congress boiling in alliance chaos Dangerous warning of a major split Warning to Delhi