தி.மு.க. அதிரடி...! பேச்சுவார்த்தைக்கான சிறப்பு குழு அமைப்பு...! - துரைமுருகன் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாகவே மாநில அரசியல் சூழல் தீவிர பரபரப்பில் மூழ்கியுள்ளது.

ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றால் நான்கு முனை போட்டி உருவாகி, தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன.

அதே நேரத்தில், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இடம்பிடித்து வலுவான அணிவகுப்பை உருவாக்கியுள்ளன.

இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் உடன்பாடு குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. சார்பில் டி.ஆர். பாலு தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அந்த குழுவில் கே.என். நேரு, திருச்சி சிவா, ஆ. ராசா, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், கூட்டணி கட்சிகளுடன் நாளை முதல் தொகுதி பேச்சுவார்த்தை தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த குழு அமைப்பு தேர்தல் பணிகளை வேகப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கணக்குப் போர் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK takes action Special committee formed talks Durai Murugan announcement


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->