ED கையில் முக்கிய ஆவணங்கள்.. "செந்தில் பாலாஜி வசமாகுமா?"..!! நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய நண்பர்கள் உள்ளிட்டோர் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்பி எம்எல்ஏக்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தபோது இருதரப்பும் சமாதானம் ஆனதால் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் முடித்துவைத்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான இந்த வழக்கை சிறப்பு மன்றம் முடித்து வைத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்ததோடு, கடந்த செப்டம்பர்  30-ஆம் தேதிக்குள்  வழக்கில் விசாரணை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் விசாரிக்க தமிழக அரசிடம் இருந்து ஒப்புதல் மற்றும் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தது.மேலும் சில போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவையில்லாமல் இந்த வழக்கில் தங்களை இணைத்துள்ளதாக தெரிவித்தார்.

அப்போது இந்த வழக்கு தொடர்பாக மத்திய  போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் சுமார் 900 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை தொடங்க முடியும் என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

இதற்கிடையே நேற்று செந்தில் பாலாஜி சார்பில் 3வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சிலவற்றை மாற்றியமைத்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால்அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியின் முன்பு ஆஜர்ப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் கோரப்பட்டுள்ள அமலாக்கத்துறையின் ஆவணங்கள் செந்தில் பாலாஜி தரப்பிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk senthi balaji judicial custody end today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->