கொரோனாவுக்கு பலியான  திமுக ஒன்றியச் செயலாளர்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பதிப்பில், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் 6 மாதமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. 

பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

55 வயதான காந்தி தொற்று பாதிப்பால் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். திமுக ஒன்றியச் செயலாளர் காந்தியின் மரணம் ஒரத்தநாடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk Secretary of the Union person dead in corona


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->