இனி கல்லூரிகளிலும் அரசியல்.!! திமுக போட்ட மாஸ்டர் பிளான்.!! வெளியான முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தன்னுடன் பயின்ற பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து "இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு" என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணியை இந்த அமைப்பின் மூலம் நடத்தினார். திராவிட இயக்கம் போராட்டத்துக்கு மாணவர்களைத் திரட்டுவதற்காக 1941ம் ஆண்டு தனது 16வது வயதில் "மாணவ நேசன்" என்ற கையெழுத்துப் பத்திரிகையையும் நடத்தினார். இதுவே பிற்காலத்தில் முரசொலி உருவாக வித்தாக அமைந்தது.

அதேபோன்று கருணாநிதி தனது 17 வயதில் "தமிழ்நாடு மாணவர் மன்றம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். கருணாநிதி உருவாக்கிய தமிழ்நாடு மாணவர் மன்றம் திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்ற சிறப்பைப் பெற்றது. இதில் க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோர் இந்த அணியில் இணைந்து செயல்பட்டனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதையொட்டி தமிழ்நாடு மாணவர் மன்றம் மீண்டும் உருவாக்கப்பட்டு கல்லூரிகளில் தனி அமைப்பாக செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் திராவிட கொள்கையை கொண்டு மாணவர்கள் மூலம் தமிழ்நாடு மாணவர் மன்றம் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த தமிழ்நாடு மாணவர் மன்றமானது அரசியல் சார்பற்ற கல்லூரி மாணவர்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக மாநில அளவில் ஒரு தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். இது திமுக மாணவர் அணி உடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்த மன்றங்களில் ஆண்டுதோறும் திறனாய்வுப் போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் அரசியல் சார்பின்றி ஒற்றுமையாக இருந்து வரும் நிலையில் திமுக தனது அரசியலை கல்லூரிகளில் மத்தியில் திணிக்க முற்படுவது கல்லூரி மாணவர்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் எனவும், திமுகவை போன்று பிற அரசியல் கட்சிகளும் தங்கள் சார்பில் மாணவர் மன்றங்களை ஆரம்பித்தால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரித்தாலும் சூழ்ச்சி தலை தூக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK re establish TamilNadu Student Union in all Colleges


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->