"துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!": தவெக அரசின் போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

துரோகத்திற்கு இடைக்கால வெற்றி: சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகி ஆளும்கட்சியில் சேர்ந்த ஜனநாயகப் படுகொலையால் திணிக்கப்பட்ட இத்தேர்தலில், பணபலம், அதிகார பலம், மற்றும் காவல் துறையைத் தவறாகப் பயன்படுத்தித் தவெக பெற்றுள்ள வெற்றி "துரோகத்திற்குக் கிடைத்த இடைக்கால வெற்றி" மட்டுமே ஆகும்.

போலி பிம்பத்தின் வீழ்ச்சி: "5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார்" எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு அரசியல் சரிவு வேறு எந்த முதலமைச்சருக்கும் ஏற்பட்டதில்லை.

ரீல்ஸ் காட்சியும் பிரச்சாரமும்: சினிமாவில் கிடைத்த கவர்ச்சியை மட்டுமே நம்பி, கொளுத்தும் வெயிலில் 4 நாட்கள் தெருத்தெருவாக அலைய வைத்து முதலமைச்சர் விஜய்யை மக்கள் 'கொத்து புரோட்டா' போட்டுவிட்டார்கள்; இனியாவது ஆட்சி மற்றும் மக்கள் பணிகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

விதிமீறல்கள் & அச்சுறுத்தல்கள்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மகளிர்க்கான திட்டங்களை அறிவித்துத் தேர்தல் நடத்தை விதிகளைத் தவெக மீறியுள்ளது. ஜி-பே மூலம் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கி ஊரையே விலைபேசியதும், வாக்காளர்களைக் காவல் துறை மூலம் மிரட்டியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெரும்பான்மை மக்களின் நிராகரிப்பு: தவெகவுக்கு எதிராக வாக்களித்த அனைத்துக் கட்சிகளின் வாக்குகளையும் கூட்டிப் பார்த்தால், அதுவே பெரும்பான்மை வாக்குகள். தவெக அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

தொண்டர்களுக்கு நன்றி: ஆளும்கட்சியினரின் மிரட்டல்களையும் மீறிப் போட்டியிட்டு உழைத்த திமுக உடன்பிறப்புகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK President MK Stalin Slams TVK Bypoll Win as Interim Victory for Betrayal Claims Ruling Party Fake Image Exposed


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->