அமைதிக்கான நோபல் பரிசு... தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளை அவர்களுக்கு முதலவர் விஜய் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


தமிழக முதலவர் ஜோசப் விஜய் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும், நீதிக்காகவும் அயராது குரல் கொடுத்துவருபவரும், தென்னாப்பிரிக்காவாழ் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தென்னாப்பிரிக்க மண்ணில் இனவெறிக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் வழியே தனது பயணத்தைத் தொடங்கி, அந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பதவி வகித்த திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு  மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. 

மனித உரிமைகள், சமத்துவம், நீதி மற்றும் உலக அமைதி ஆகிய உயரிய விழுமியங்களுக்காக அயராது பாடுபட்டுவரும் திருமதி நவநீதம் பிள்ளை அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm vijay wish nobel winner navanethem navi pillay


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->