அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த திமுக பிரமுகர்..வேலூரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தனது பிரச்சாரத்தை தீவிர்படுத்தி உள்ளனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி சத்துவாச்சாரி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கட்சிப் பொறுப்பாளர்களும் வாக்கு சேரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேலூர் மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான  மரியாதை நிம்மதமாக அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இச்சம்பவம் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொந்த மாவட்டம்  வேலூர் மாவட்டம். திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

இச்சம்பவத்தால் எப்போது வேண்டுமானாலும் கவுன்சிலர் ஏழுமலை கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk person support admk candidate in Vellore


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->