திமுகவின் புதிய வியூகம்: விஜய், சீமான் கையில் உள்ள GEN Z வாக்குகள்..Gen Z வாக்காளர்களை கவர தீவிரம்! திமுகவுக்கு பலன் கிடைக்குமா?
DMK new strategy Vijay Seeman have GEN Z votes Eager to attract Gen Z voters Will DMK get results
சட்டசபைத் தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆனால் இந்த முறை கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி இருப்பவர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும். இரு கட்சிகளின் வாக்கு அடிப்படை உயர்ந்து வருவதால் திமுக புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
திமுக மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகள் ஒரு விஷயத்தை தெளிவாக காட்டுகின்றன. பெரும்பாலான சட்டசபைத் தொகுதிகளில் சீமான் மற்றும் விஜய் பிரிக்கும் வாக்குகளே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சூழல் உருவாகி வருகிறது. சீமானின் வாக்கு சதவீதம் 2021-ல் 6.2 சதவீதத்திலிருந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இளைஞர்கள் அதிக அளவில் விஜயின் கட்சிக்கு திரளுவது திமுகக்கு கூடுதல் சவாலாக உள்ளது.
இந்த நிலைமையை சமாளிக்க திமுக தலைமை புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Gen Z வாக்காளர்களை அரசியல்படுத்தி தங்களின் பக்கம் ஈர்ப்பதே அந்த திட்டத்தின் நோக்கம். இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவர் தமிழ் மன்றங்களை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். ஏற்கனவே சென்னையில் உள்ள பல கல்லூரிகளில் மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திமுக இளைஞரணி சார்பில் நடத்திய அறிவுத் திருவிழா திட்டத்தையும் மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். சமூகநீதி அரசியல், திராவிட வரலாறு மற்றும் சமகால அரசியல் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் பரப்புவது இந்த மன்றங்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். கேரள கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்பற்றும் இம்மாதிரி இன்றைய இளைஞர்களைத் தேர்தல் அரசியலுக்குள் ஈர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
விஜய் தனது உரைகளில் Gen Z வாக்காளர்கள் குறித்து தொடர்ந்து பேசிவருவது திமுக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை முன்னிட்டு இளைஞர் மற்றும் மாணவர் அணியின் பணிகளை உதயநிதி ஸ்டாலின் வேகப்படுத்தி வருகிறார்.
திமுகவின் இந்த புதிய வியூகம் தேர்தலில் உடனடி பலன் தருமா என்பது அடுத்த சில மாதங்களில்தான் தெளிவாகும். ஆனால் இம்முறை இளைஞர்களே தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
English Summary
DMK new strategy Vijay Seeman have GEN Z votes Eager to attract Gen Z voters Will DMK get results