கிறிஸ்தவ வாக்குகளை கைவிடாமல் தடுக்க திமுகவின் புதிய திட்டம் – உளவுத்துறை கொடுத்த வார்னிங்? விஜய்க்கு போகும் கிறிஸ்தவ வாக்குகள்? - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிறுபான்மை வாக்குகளை உறுதியாக தக்க வைத்து கொள்ள திமுக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கிறிஸ்தவ வாக்குகள் பல தொகுதிகளில் தீர்மானிக்கும் வகையில் இருப்பதால், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை அந்த வாக்கு வங்கியை மாற்றும் அபாயமாக ஆளும் தரப்பு கருதுகிறது.

இத்தனை காலமும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே நிச்சயமாகச் சென்ற சிறுபான்மை வாக்குகள், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உருவானதிலிருந்து அசைவை காட்டுவதாக உளவுத்துறை தகவல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. விஜயின் அருகில் உள்ள முக்கிய ஆலோசகர்களில் பலர் கிறிஸ்தவ பின்னணியைச் சேர்ந்தவர்கள். மேலும் அவரது ரசிகர் அடிப்படையிலும் கிறிஸ்தவ சமூகத்தின் வலுவான ஆதரவு இருப்பதாக மதிப்பீடுகள் கூறுகின்றன.

இதனால், அந்த வாக்குகள் தவெகவுக்கு நகரும் சூழலைத் தடுப்பதற்காக திமுக தன்னுடைய தொடர்புகளை புதுப்பிக்க முயற்சி செய்கிறது. சமீப வாரங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கிறிஸ்தவ பிரிவு தலைவர்களையும் பேராயர்களையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகள் அனைத்தும் சாதாரண மரியாதைச் சந்திப்புகள் அல்ல, அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்டவை எனக் கணிக்கப்படுகிறது.

வரும் டிசம்பர் 20ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். அதே நாளில் அரசு விழாவும், கிறிஸ்துமஸ் நிகழ்வும் ஒன்றாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது முக்கியமான அரசியல் குறியீடாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கன்னியாகுமரியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளனர்.

தென் மாவட்டங்களில் கிறிஸ்தவ சமூகத்தின் வாக்குகள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தாட்கொண்டு இருக்கும் நேரத்தில், விஜயின் எழுச்சி அவர்களை கவரக்கூடும் என்பதால் ஆளும் தரப்பில் கவலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜயின் தவெக 100க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்த வாக்குகள் சிதறினால் பல முக்கிய தொகுதிகளில் திமுகக்கு பின்னடைவு ஏற்படலாம் என்பது அரசியல் நிபுணர்களின் பார்வை.

மொத்தத்தில், கிறிஸ்தவ வாக்குகளுக்கான போட்டி இப்போது திமுக விதைக்கும் அரசியல் பாசாங்குகளையும், விஜயின் எழுச்சி உருவாக்கும் புதிய சூழ்நிலையையும் ஒருசேர பிரதிபலிக்கிறது. ஆனால் இந்த நகர்வுகள் 2026 தேர்தலில் என்ன விளைவு தரும் என்பது காலமே சொல்லும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK new plan to prevent Christian votes from being abandoned Intelligence warning Christian votes going to Vijay


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->