ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.,க்கள் கூட்டம்! - Seithipunal
Seithipunal


2023-24 ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) குறித்து விவாதிக்க, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 29-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு திமுகவின்  தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29.01.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் 2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து பொருளில் விவாதிக்கப்படும்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MPs meet 29 jan 2023


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->