எல்லாமே ஈபிஎஸ் கையில்!! அதிமுகவுக்கு தாவும் திமுக வாரிசு.!! பதறும் பாஜக தரப்பு!!
Dmk mp trichy siva son Surya siva joining in AIADMK
தமிழக பாஜகவின் ஓபிசி அணி தலைவராக இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா உக்கட்சி பூசல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் தமிழக பாஜகவில் இருந்து விரைவில் விலகுவதாக அறிவித்தார். கட்சியிலிருந்து விலகினாலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட போவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தற்போது அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் வரும் நவம்பர் 5ஆம் தேதி அதிமுகவில் இணைய உள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்த பிறகு தற்போது அவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருச்சி சூர்யாவும் அதிமுக இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வலதுகரமாக செயல்பட்டு வரும் அமர் பிரசாத் ரெட்டியை போன்று சூர்யா சிவா செயல்பட்டு வந்த நிலையில் சில உட்கட்சி பிரச்சனையின் காரணமாக வெளியேறியதும் தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார்.
அதேபோன்று அண்ணாமலையின் பல விவகாரங்கள் சூர்யா சிவா தெரிந்து வைத்துள்ள நிலையில் அவர் அதிமுகவில் இணைந்தால் தமிழக பாஜகவுக்கு பல சிக்கலை ஏற்படுத்தும் என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Dmk mp trichy siva son Surya siva joining in AIADMK