ஸ்டாலின் வழியில் கனிமொழி.. வெளியான அதிரடி அறிவிப்பு.! அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்.!! - Seithipunal
Seithipunal


திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழிக்கு வரும் ஜனவரி 5-ம் தேதி பிறந்தநாள். தனது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வருவதையும், வாழ்த்து பொருட்கள் அனுப்புவதையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த மாதம் தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னையில் வெள்ளம் வடிவதற்குள் மற்றுமொரு பேரிடராக, தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி அதிக பாதிப்புக்குள்ளானது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டங்களாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்புகளைச் சீர்செய்து இயல்புநிலை திரும்பிட களத்தில் எல்லோரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இச்சூழலில் எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர் கே.என் நேரு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க யாரும் வர வேண்டாம் என அறிவித்த நிலையில், புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க யாரும் வர வேண்டாம் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வரிசையில் தற்போது கனிமொழியும் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வருவதையும், வாழ்த்து பொருட்கள் அனுப்புவதையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk mp kanimozhi ordered no one should come to meet on bday


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->