உயிர் போகும் வரை... உழைத்த திமுக எம்எல்ஏ புகழேந்தி.!! கண்ணீரில் உடன்பிறப்புகள்.!!
DMK mla pugazhenthi worked for election until passed away
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானார்.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீர்னு ரத்த வாந்தி எடுத்ததால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவர் விழுப்புரம் இணந்த நிலையில் சற்று முன்னர் திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்துள்ளார். தனக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்தும் ஓய்வெடுக்காமல் கடந்த பத்து நாட்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவி குமாருக்காக கடும் வெயிலிலும் பணியாற்றி இருக்கிறார் திமுக எம்எல்ஏ புகழேந்தி. உடல் நலக்குறைவு பாதிக்கப்பட்டது தெரிந்தும் அவர் அரசியல் பணியில் ஈடுபட்டு இருந்தது திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
DMK mla pugazhenthi worked for election until passed away