கூலி தொழிலாளி கூட ₹.1000 வாங்குறாங்க.- விலை உயர்வு பற்றி திமுக அமைச்சரின் கொந்தளிக்க வைத்த பேச்சு.! - Seithipunal
Seithipunal


தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காய்கறிகள் மற்றும் தானியங்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தக்காளியின் விலை 100 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வருகிறது.

அத்துடன் அரிசி, பயிறு மற்றும் பருப்பு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. மழையின் காரணமாக இவற்றின் வரத்து குறைந்துள்ளது. எனவே விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் தானியங்களின் விலை உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

இது பற்றி திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிய போது, "தற்போது ஒரு சாதாரண கூலி தொழிலாளி கூட அன்றாடம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். மக்கள் மத்தியில் பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கிறது. வேலை வாய்ப்புகளை தாராளப்படுத்தியுள்ளோம்.

கட்டுமான தொழில்களும் நிறைய நடப்பதால் பொதுமக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது. ஆகவே விலைவாசி உயர்வுக்கு எல்லாம் மக்கள் சிரமப்படுவதாக தெரியவில்லை. வருவாய் அதிகமாக இருப்பதால் விலை உயர்வு மக்களை பாதிக்கவில்லை.

தக்காளி சீசன் பொருளாகியுள்ளது. ஒரு பத்து நாளில் இந்த ஏற்ற இறக்கம் எல்லாம் சரியாகிவிடும். அதை கட்டுப்படுத்த அரசு ரேஷன் கடை மூலம் தக்காளி வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. " என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk minister senji masthan about Vegetable price hike


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->