திமுகவில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் பதவி பறிப்பு..!!
DMK Minister Senji Mastan brother stripped of his post
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது இந்த விவகாரத்தில் தற்போது வரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி 20வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவரும் பிரபல சாராய வியாபாரியுமான மருவூர் ராஜா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மருவூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுக அமைச்சர் மஸ்தான் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அவருடைய குடும்பத்தினரும் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்த நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் காஜாநஜீர் வகித்து வந்த செஞ்சி போரூர் திமுக செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கார்த்திக் என்பவரை நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டு உள்ளார். செஞ்சி மஸ்தான் தம்பி மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
DMK Minister Senji Mastan brother stripped of his post