CM ஸ்டாலினுக்கு போன் போட்ட ஆளுநர்! வேற வழியே இல்லை, கையறு நிலைங்க - திமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி தெரிவித்தாவது, "ஆளுநர் மாளிகையில் நடந்த விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தி வீர வசனம் பேசியுள்ளார் அதிமுக ஜெயக்குமார். 

நாங்கள் வர முடியாது என்பதை கட்சியின் சார்பாக சொன்ன பிறகு, ஆளுநர் மாளிகையில் இருந்து முதலமைச்சரை தொடர்பு கொண்டு 'நீங்கள் அவசியம் அதிலே கலந்து கொள்ள வேண்டும்' என ஆளுநரே தொடர்புகொண்டு கேட்கும் நிலையில் நாட்டின் முதலமைச்சராக இருப்பவர் ஆளுநரை சந்திக்காமல் இருக்க முடியாது.

பாரதிய ஜனதாவிற்கு எந்த காலத்திலும் அடிபணிய வேண்டியதோ பயப்பட வேண்டியதோ அவசியம் இல்லை. நாங்கள் பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லை. 

தைரியமாக பாஜகவை எதிர்க்கும் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான். எல்லோரையும் ஒருங்கிணைத்து மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் என்பதை நாடு மறக்காது. 

நாங்கள் யாரைக் கண்டும் பயப்பட வேண்டியதில்லை, அஞ்ச வேண்டியதில்லை. மடியில் கனமில்லை, பயம் இல்லை. மடியில் கணம் அதிமுகவிற்குத்தான். பயம் அவர்களுக்கு தான். அவர்கள் வேண்டுமென்றால் அவர்கள் எஜமானர்களுக்கு பயப்படலாம், எங்களுக்கு எஜமானர்கள் பாரதிய ஜனதாவை சேர்ந்தவர்கள் அல்ல.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்துக்கும் செய்த நன்மைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அவரது நூற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிடுவதை அதிமுக அரசியல் ஆக்குகிறது.

கட்சியின் தலைவியின் மறைவுக்கு பிறகு அகில இந்திய தலைவர்களை அழைத்து ஒரு இரங்கல் கூட்டமாவது அவர்களால் போட முடிந்ததா? தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவை தாஜா செய்து கிடந்தவர்கள் அதிமுகவினர். எதிர்கட்சியாக இருந்த போதும் கம்பீரமாக திமுக எதிர்த்தது; இப்பொழுதும் அதே கம்பீரத்துடன் பாஜகவை எதிர்க்கிறது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister say about CM Stalin Governor meet


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->