அது போட்டோஷாப்... பொய்ச் செய்திகளை பரப்பும் அதிமுக அடிமைகள் - கொந்தளிக்கும் திமுக!
DMK IT Wing condemn to ADMK Inbadurai
திமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் அவர்கள் லண்டனில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தியதை சில விஷமிகள் போட்டோஷாப் செய்து பரப்பி வந்தார்கள்.
பாஜகவின் அடிமையாக கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் "10 இலட்சம் அபராதம்" புகழ் இன்பதுரை அந்த போட்டோஷாப் செய்யப்பட்ட படத்தை வைத்து பதிவு போட்டுள்ளார்.
ஒரு வழக்கறிஞராக இருந்தும் உண்மை எது, பொய் எது என்று கூட கண்டறியாமல் பாஜக வாட்சப் யூனிவர்சிட்டியில் வரும் பொய் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்.
அதிமுக ஆட்சி காலத்தில் அரசு கல்வி டிவியில் காவி உடையில் திருவள்ளுவரை வைத்ததை எல்லாம் வசதியாக மறந்துவிட்டாரா?
பொய்ச் செய்திகளை பரப்பும் அதிமுக அடிமைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
DMK IT Wing condemn to ADMK Inbadurai