உழைப்பாளர் கைகளில் இனி அதிகாரம் இருக்கும்... உழைப்பாளர் உரிமைகளை நாம் சேர்ந்து வென்றெடுப்போம்...! - விஜய்
Power now be hands workers Let us together win rights workers Vijay
உலகம் தழுவிய உழைப்பாளர்களின் அர்ப்பணிப்பும் சாதனைகளும் போற்றப்படும் விதமாகவும், அவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் வலுப்பெறும் நோக்கிலும் ஆண்டுதோறும் மே 1ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், இன்றும் தொழிலாளர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உழைப்பாளர்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து உரையில், “உழைப்பின் வியர்வையில் உயர்வு உருவாகிறது என்ற நம்பிக்கையுடன், இரவும் பகலும் விடாமுயற்சியுடன் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் முழுமையாக அவர்களிடம் சேர வேண்டும்.
அவர்களின் வாழ்வாதாரம் மேலும் செழிக்க நாம் ஒற்றுமையுடன் உறுதியெடுக்க வேண்டும். உழைக்கும் கரங்களை உயர்வாகக் கொண்டாடுவோம்! தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Power now be hands workers Let us together win rights workers Vijay