ரஜினியை மிரட்டிய தி.மு.க. குடும்பம்... விஜயிடம் அது ஒருபோதும் நடக்காது...! - ஆதவ் அர்ஜுனா - Seithipunal
Seithipunal


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தி.மு.க. அரசை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய கட்சியின் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.க. குடும்பத்தின் மீதான அதிரடி விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், "தமிழகத்தின் அரசியல் அமைப்பையே மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வர முயன்ற நடிகர் ரஜினிகாந்தை தி.மு.க. குடும்பம் மிரட்டிப் பணிய வைத்தது.

ஆனால், அத்தகைய மிரட்டல்களையும் தாண்டி அரசியலுக்கு வரும் மன வலிமை த.வெ.க. தலைவர் விஜயிடம் உள்ளது.

அவர் மீது தனிப்பட்ட முறையில் எத்தனை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றுக்கு அஞ்சாமல் உறுதியுடன் மக்கள் பணியில் விஜய் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK family that threatened Rajini That never happen Vijay Aadhav Arjuna


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->