திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்...! இன்று முதலமைச்சர் தலைமையில் கலைஞர் அரங்கத்தில் தொடங்கியது...!
DMK District Secretary meeting began today at Kalaignar Arena under chairmanship Chief Minister
வருகிற தமிழக சட்டசபை 2026 ம் ஆண்டு தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.இந்த தேர்தலில் 4 முனை போட்டியாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அ.தி.மு.க ம் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இப்போதே தேர்தல் பணிகளை தி.மு.கவும், அ.தி.மு.க.வும் தொடங்கி விட்டன. இதில் குறிப்பாக பூத் கமிட்டி ஏஜெண்டுகளை தயார்ப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.மேலும் நடிகர் விஜய்யும் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்தி தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பாக தொடங்கி இருப்பதை நாம் காணலாம்.இந்நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
மேலும், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், கனிமொழி, திருச்சி சிவா, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி,முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.இதில் கூடுதலாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
மேலும், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கம் அளித்து துணை பொதுச்செயலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரையாடுகிறார்.
English Summary
DMK District Secretary meeting began today at Kalaignar Arena under chairmanship Chief Minister