பெரியார் மண்ணில் ஸ்டாலினின் பகுத்தறிவு பேச்சு! திமுக ஆட்சியின் ராசியால் மழைப்பொழிவு! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கோவை சென்றடைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதன் ஒரு பகுதியாக ஈரோடில் திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமாரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின் மணமேடையில் திமுக தொண்டர்கள் மத்தியில் பேசியனர்.

அப்போது பேசிய அவர் "திமுக ஆட்சி அமைந்த போது கொரனா எனும் கொடிய தொற்று நோய் பாதிப்பை சந்தித்தோம். அதிலிருந்து மீண்ட பிறகு தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தொடர் மழை பெய்து வருகிறது. நான் சென்னை மேயராக 1996 இல் இருந்த பொழுது அடுத்தடுத்து சென்னையில் பத்து நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. 

அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி மழை பாதிப்பை பார்வையிட்ட பொழுது "ஸ்டாலின் சென்னையின் மேயர் ஆனது முதல் மழை பெய்து கொண்டே இருக்கிறது" என்று கூறியிருந்தார். அதேபோல் இப்பொழுதும் தொடர்ந்து மழை பெய்கிறது. நம்ம அதிர்ஷ்டத்தால் குடிநீர் பஞ்சம் ஏற்படாது. இது நம்முடைய ராசி. திமுகவுக்கு வாக்களித்த உங்களின் ராசி" என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

திமுகவினரும் திராவிடர் கழகத்தினரும் பகுத்தறிவு பற்றியும் இந்து மத சடங்குகள் பற்றியும் கிண்டல் அடித்து பலகாலமாக பேசி வரும் நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ராசி மீது நம்பிக்கை வைத்து பேசியது விவாதத்தினை கிளப்பியுள்ளது. இவர்களுடைய பகுத்தறிவு எல்லாம் நான்கு சுவற்றுக்குள் காணாமல் போய்விடுமோ என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் பெய்த மழைக்கு எல்லாம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான்தான் காரணம் என்று ஸ்டாலின் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என நெட்டிசன்கள் கலாய்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK coming to power is raining in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->