234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்...! - இலுப்பூரில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பு...!
DMK alliance win 234 seats Walk collect votes Iluppur
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சியினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று காலை புதுக்கோட்டை இலுப்பூரில் நடைபயிற்சியில் ஈடுபட்ட அவர், திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், "யார் என்ன செய்தாலும் திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியாது; 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டக் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
English Summary
DMK alliance win 234 seats Walk collect votes Iluppur