திமுக கூட்டணியில் விரிசல் விழும், உடையும், பிரியும்,...! ஆனால் பாஜக கூட்டணி விரிவடையும்...!- எல். முருகன் - Seithipunal
Seithipunal


அனைத்து கட்சிகளும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டன. இதில் 2019 -ம் ஆண்டு உருவான திமுக கூட்டணி, 2026 தேர்தலிலும் தொடரவுள்ளது.மேலும், அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கவுள்ளது.

இந்த சூழலில்,நேற்று நிருபர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் 'சண்முகம்' அவர்கள், "2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.இந்த கருத்து திமுக கூட்டணியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே,  திமுக கூட்டணி விரைவில் உடையும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.இதுத்தொடர்பாக  கருத்து தெரிவித்த எல்.முருகன், "திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சி பாஜக கூட்டணிக்கு வர தயாராக உள்ளது. இதற்காக அந்த கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இன்னும் 3 மாதங்களுக்குள் பாஜக கூட்டணி விரிவடையும். இந்தக் கட்சி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி தான்.

விரைவில் திமுக கூட்டணி உடையும். இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைவது உறுதி. புதிதாக வரவிருக்கும் கட்சிகள் யார் என்று பொறுத்திருந்து பாருங்கள். எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட்டால் அரசியலில் எதிர்பார்ப்பு இருக்காது" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK alliance will crack break and split But BJP alliance will expand L Murugan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->