வைகோ, திருமா, ஈஸ்வரன் வரிசையில் அடுத்து வெளியான அதிரடி அறிவிப்பு.! திமுகவுக்கு நெருக்கடி.!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி, 'நாம் தனித்து தான் போட்டியிட வேண்டும்" என்று கடந்த பாராளுமன்றத் தேர்தல், உள்ளாட்சி உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்து வந்தார்.

தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தினை உதயநிதி தெரிவித்து வருகிறார். மேலும், கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை வலியுறுத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகின. 

இதனை அறிந்தே கடந்த மக்களவைத் தொகுதி மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகள், வரும் சட்டமன்ற தேர்தலில் தனித் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றன.

முதலாவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ தாங்கள் தனித்து தான் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று அறிவித்தார். அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தது.

இதேபோல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரனும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தாங்களும் தனி சின்னத்தில் தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk alliance party take own election simple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->