திடீர் ட்விஸ்ட்... "திமுக கூட்டணியில்" நாமக்கல் தொகுதி வேட்பாளர் அதிரடி மாற்றம்.!!
DMK alliance namakkal constituency candidate changed
மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்க உள்ள நிலையில் அக்கட்சியின் சார்பில் சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சூர்யா மர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி ரீதியில் தலித் மக்களை குறிவைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனால் அவரை மாற்ற வேண்டும் என திமுக தரப்பிலிருந்து குரல் எழுந்தது. சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிரான கருத்துகள் வலுத்த நிலையில் தற்போது சூரியமூர்த்தி நாமக்கல் தொகுதி வேட்பாளரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்
அவருக்கு பதிலாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக மாதேஸ்வரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
English Summary
DMK alliance namakkal constituency candidate changed